Saturday, 19 July 2008

காரைதீவு ஆடிவேல் தீர்த்தோற்சவத்தில் அறுவர் கடலில்: நால்வர் காப்பாற்றப்பட இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்


இன்று நடைபெற்ற காரைதீவு ஆடிவேல் தீர்த்தோற்சவத்தில் அறுவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்

சரித்திரப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் இன்று 19 திகதி நடைபெற்றது.

காலை 11.00 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை இவ் வனர்த்தம் சம்பவித்துள்ளது.

அடுத்த வாரம் கபொத உ.த பரீட்சைக்குத் தோற்றவிருந்த செல்லத்துலரை ஜனார்த்தனன் காண்டீபன் தனுஸாந் ஆகியோரே காணாமல் போனவர்களாவர்.

இச்சம்பவத்தால் காரைதீவு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராசா பொலிசாரின் உதவியோடு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்னும் சடலமோ தகவலோ எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த 2002 ல் திருவாதிரைத் தீர்த்தத்தில் 11 இளைஞர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

No comments: