Saturday, 19 July 2008

சார்க் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் படைவீரர்கள் தமது ஆயுதங்களை இலங்கை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்

சார்க் மாநாட்டுக்கு வருகை தரும் தலைவர்களின் பாதுகாப்புக்காக வரும் பாதுகாப்புத் தரப்பினரின் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் செயற்படுவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது

அதேநேரம் இலங்கையின் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய இவர்கள் செயற்படுவார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது இலங்கையின் மேல் மாகாண சிரேஷ்ட காவல்துறை அதிகாரி நிமல் மெதிவக்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் படையினர் முதலில் தமது ஆயுதங்களை இலங்கையின் அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னர் தமது ஆயுதங்களுடன் செயற்பட அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: