1983ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் இனக்கலவரம் ஏற்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் தொடர்பாக சிங்கள பெண்ணொருவர் கண்காட்சி நடத்தி வருகின்றார்.
சிறீலங்காவின் தென் பகுதியிலுள்ள பல இடங்களில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இந்தக் கண்காட்சி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையைச் சேர்ந்த அனோமா ராஜகருண என்ற இந்தப் பெண், கடந்த 17 வருடங்களாக இது தொடர்பான சாட்சிகளையும், நிழற்படங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது. பிரித்தானிய சுதேச அமைச்சின் செயலாளர் வர்னன் கோர்னர், பாராளுமன்ற உறுப்பினர் நீல் ஜெராட் உள்ளிட்ட சிலர் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment