Monday, 21 July 2008

படிப்பறிவில்லாத பிள்ளையான் குழு உறுப்பினர்களைக் காவல்துறையில் இணைத்துக் கொள்வதில் சிக்கல்

பிள்ளையான் குழுவினரைக் காவல்துறையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிள்ளையான் குழு உறுப்பினர்களிடம், காவல்துறையில் இணைத்துக் கொள்வதற்குக் கோரப்படும் அடிப்படை கல்வித் தகைமைகள் காணப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

எனவே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களைக் காவல்துறையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட சலுகைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கிழக்கை மீட்டெடுத்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

No comments: