Sunday, 6 July 2008

மொனறாகலவில் புலிகள் தாக்குதல்: 2 காவல்துறையினர் பலி,அம்பாறையில் 2 சிறிலங்கா அதிரடிப்படையினர் பலி

மொனறாகல மாவட்டத்தில் .......
உள்ள புத்தள - கதிர்காமம் வீதியில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

புத்தள - கதிர்காமம் வீதியில் 38, 39 ஆம் கட்டைகளுக்கு இடையில் சிறிலங்காப் படையினரின் இரு காவலரண்களுக்கு இடையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள், வீதியில் காவல் கடமையில் நின்ற காவல்துறையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:50 மணியளவில் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினரே பொறிவெடியில் சிக்கினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments: