Saturday, 19 July 2008

2008 ஜி.சி.ஈ உயர்தர நேரசூரி இணையத்தில்,இடம் பெயர்ந்த மாணவர்கள் பரீட்சை எழுத சிறப்பு ஏற்பாடு

அடுத்தமாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சையின் நேர அட்டவணையை இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்

WWW.Doenets.Lk என்ற வெப்தளத்தின் மூலம் இந்த நேர அட்டவணையை பார்வையிட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 2இலட்சத்து 45ஆயிரம் பரீட்சாத்திகள் தோற்றவிருக்கின்றனர் இவர்களில் 60ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகள் க.பொ.த உயர்தரப் பரீட்சாத்திகளுக்குரிய அனுமதி அட்டைகளை இம்மாதம் 20ம் திகதியிலிருந்து (நாளையிலிருந்து) அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாடசாலை மற்றம் தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு தபால் மூலமே அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறுபகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தற்பொழுது கிளிநொச்சி வலயப் பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பரீட்சை எழுத ஏதுவாக அவர்களுக்கான வினா பாத்திரங்களும்

தயார் செய்யப்பட்டுள்ள தாக கரைச்சிக்கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.அமிர் தலிங்கம் அறியத்தருகிறார்.

அவர் இத பற்றி மேலும் தெரிவிக்கையில்:

ஏறிகனவோ அறிவிக்கப்பட்டதன் படி வரும் 21 ஆம் திகதி இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள இடம்பெயர்ந்த மாணவர்களின் தொகையை அதிபர்கள் ஊடாக கேட்டறிந்தோம் அதன்படி சில மாணவர்கள் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.

அதுதவிலர இன்னும் பல மாணவர்கள தம்மைப் பதிவு செய்யாதுள்ளனர். அவர்களுக்காக பரீட்சை வினாத் தாள்களைத் தயார் செய்துள்ளோம் ஆகவே உரிய பாடசாலைகளின் இடம்பெயர்ந்த மாணவர்களின் தொகைக்கேற்ப பரீட்சை வினாத்தாள்களைக் கரைச்சிக் கோட்டக் கல்வி அலுவலகத்தில் வரும் 20 ஆம் திகதிக்குமுன் (நாளை) பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: