Saturday, 12 July 2008

வன்னிக்களமுனையில் புலிகளின் தாக்குதல்களில் 26 படையினர் காயம்

வன்னிக்களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட தகவல்:

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 12:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

மற்றொரு பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நவ்விப்பகுதியில் நேற்று பிற்பகலில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் காயமடைந்துள்ளனர்.

இதே பகுதியில் நேற்று பிற்பகல் 1:15 மணியளவில் மேலும் நான்கு படையினர் மிதிவெடிகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

மாலை 6:40 மணிக்கு மேலும் இரு படையினர் பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு நட்டான்கண்டல் பகுதியில் நேற்று பிற்பகல் 12:15 மணியளவில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள புதுக்காமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் நேற்று பிற்பகல் 1:40 மணியளவில் சிக்கிய படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று முற்பகல் 9:20 மணியளவில் வெளிமருதமடுவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.

மணலாறு ஜனகபுர வடக்குப் பகுதியில் நேற்று முற்பகல் 9:40 மணியளவில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

வடக்கு கிரிபன்வேவவில் நேற்று முற்பகல் 9:22 மணிக்கும் 11:15 மணிக்கும் விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு கிரிபன்வேவவில் பிற்பகல் 5:10 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு படையினர் காயமடைந்தனர்.

No comments: