Monday, 21 July 2008

மகிந்தவின் உறவினர்களுக்கு கொடுப்பதற்க்காக குண்டுத்துளைக்காத 31 வாகனங்கள் அலரி மாளிகையில் வைக்கப்படுள்ளன!!!

bulletproof-car.jpgஅரசாங்கம் அண்மையில் இறக்குமதி செய்த குண்டுத் துளைக்காத 31 வாகனங்கள் அலரி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த வாகனங்கள் யாருக்கு வழங்க கொண்டு வரப்பட்டன என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என ஆளும் கட்சியின் பிரதான கொறட அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும்,


இந்த வாகனங்கள் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட 31 குண்டுத்துளைக்காத வாகனங்கள் பெருபாலானவை ராஜபக்ஸ நிறுவனத்தின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் கூறுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியின் பாரியார், அவரது புதல்வர்கள், ஜனாதிபதியின் பாரியாரின் உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்காக பெருபாலன வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இவை அலரி மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உழைக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊதிய அதிகரிக்க பணம் இல்லை என கூறும் அரசாங்கம், ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாக்க இவ்வாறான பாரிய நிதியை செலவிட்டுள்ளமை தேசிய அநீதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: