Monday, 7 July 2008

முல்லைத் தீவில் 36162 பேர் இடம்பெயர்வு – வவுணியா வடக்கில் 2000 மாணவர்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு துணுக்காய், வலயக்கல்வி பணிமனையின் தகவல்படி, வவுனியா வடக்கில் இருந்து சுமார் இரண்டாயிரம் மாணவர்கள், இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இந்தநிலையில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு தற்காலிக கூடாரங்களுக்கான தேவைகள் குறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 2 ஆம் திகதி, சொலிடார் நிறுவனம், சுமார் 7 பாரஊர்திகளில் கூடாரங்களை ஒட்டுச்சுட்டான் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

உலக உணவுதிட்ட தரவுப்படி, கடந்த 2 ஆம் திகதியன்று முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 61 குடும்பங்களை சேர்;ந்த 36 ஆயிரத்து 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

No comments: