Monday, 7 July 2008

இலங்கையின் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 38 ஆயிரமாகும்

வோசிங்டன் மற்றும் ஹவாட் மருத்துவ கல்லூரி ஆகியன மேற்கொண்டுள்ள ஆய்வின்படி இலங்கையில் 1983 ஆம் ஆண்டில் இருந்து 2002 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில், குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை 3 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கலாம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பான செய்திகளை நிறுவனங்கள் வெளியிடுகின்ற போது வழமையாக யுத்தத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு சென்னையில் இருந்து வெளியாகும் செய்தித்தாள் ஒன்று இந்த ஆய்வு மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

No comments: