Tuesday, 22 July 2008

4500 ஆண்டுகளுக்கு முன்னரான மரப்படகு கண்டுபிடிப்பு

எகிப்தில் 4500 ஆண்டுகளுக்கு முந்திய மரப்படகொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிசா பெரிய பிரமிட்டுக்கு அடுத்ததாக உள்ள பாதாள அறையில் மரப்படகின் நூற்றுக்கணக்கான உடைந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

அவற்றை ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படகு 4500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தப் படகுகள் கிரேட் பிரமிட்டை உருவாக்கிய பாரோ மன்னன் இறந்த பிறகு அவனது உடலை கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

No comments: