Tuesday, 22 July 2008

கிழக்கு முதலமைச்சரே அதிகாரங்களை கோரவில்லை ஏனையோர் அதிகாரங்களை கோருகின்றனர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரங்களை கோராத போது ஏனையோர் அதிகாரங்களை கோரிநிற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துளளது.

அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, திலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் ரஞ்சித் நவரட்ன ஆகியோர் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி நாட்டிற்குள் தேசிய அமைப்பு ரீதியான கருத்தொன்றை முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளில் மூலம் புலிகளை முழுமையான ஒழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அமைச்சர்களான இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையினால் தேசிய ஐக்கியம் சீர்குலையக் கூடும்.

சந்திரிக்கா அரசாங்கம் அப்போது முன்னெடுத்த சுதுநெலும், தவளம ஆகிய நடவடிக்கைகளினால் படையினரின் மனத்திறன் பாதிக்கப்பட்டதாக நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

படையினரின் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் எவரேனும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஜாதிக ஹெல உறுமய அதனை தோற்கடிக்கும் முனைப்புகளை மேற்கொள்ளும். மாகாண சபைகளுக்கு காவற்துறை, காணி அதிகாரங்கள் வழங்குவதை தமது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments: