கொழும்பில் நாளை முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நடைபெவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான 500 மருத்துவர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவக்குழுவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, நிர்கொழும்பு போதனா வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, சொய்சா பெண்கள் மருத்துவமனை, கண்டி போதனா வைத்தியசாலை, ஸ்ரீஜயவர்தனபுர போதனா வைத்தியசாலை, இராணுவம் மற்றும் காவற்துறையின் மருத்துவ பிரிவுகளின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் தேவையான நேரத்தில் மருத்துவ வசதிகளை வழங்க தயாரான நிலையில் இருப்பர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனை தவிர கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் ஒரு அவசர சிகிச்சை பிரிவும், 5 நோயாளர் காவு வண்டிகளும் இந்த சுகாதார சேவைக்கென ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்;துள்ளர்.
Saturday, 26 July 2008
வடக்கு கிழக்கில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஆனால் சார்க் - நோயைக் குணப்படுத்த 500 வைத்தியர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment