கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை (திருகோணமலையின் மீது கண்ணாம்)என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது.
தமது குழுவினருக்கு திருகோணமலைக்குச் செல்ல அனுமதி வழங்குவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அனுமதி மறுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக தமது குழு விமான நிலையம் வரை சென்று மீண்டும் திரும்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயலினால் பல மாதங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை விஜயம் பயனற்றதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Friday, 25 July 2008
ஆயுதத்துடன் இயங்கும் முதலமைச்சரை சந்திப்பதை ஜரோப்பிய ஒன்றியதூது குழு தவிர்த்தது!! இதன் பின்னணியில் தேவானந்தா இருப்பதாக தகவல்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment