Friday, 25 July 2008

தடையையும் மீறி ஒரு ஐரோப்பிய நாடு அனுப்பி உள்ள ஆயுதங்கள் படையினரின் பலத்தை அதிகரிக்கும் - படையதிகாரி

இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மீறி ஐரோப்பிய நாடொன்று இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியென மூத்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னி படைநடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் புலிகளுடன் தொடர்புடைய தன்னார்வ அமைப்புகள், இலங்கைக்கு வழங்கவிருந்த 10 ஆயிரம் ஆயுதங்களை நிறுத்துமாறு குறித்த ஐரோப்பிய நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும் அதனையும் மீறி குறித்த நாடு அந்த ஆயுதங்களை இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்க உள்ள இந்த ஆயுதங்கள் மூலம் படையினரின் பலம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

No comments: