கண்டியில் ரில்வின் குற்றச்சாட்டு அரசாங்கம் உலக நாடுகளில் கடன் பெறுவதையிட்டு பெரிதும் பெருமைப்படுகின்றது. இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும் என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 51 ஆயிரம் கோடி ரூபாவுக்கான வட்டியே வழங்கி வருகின்றது. இது நாட்டுக்குச் செய்யும் துரதிர்ஷ்ட செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கண்டி பிரதான அஞ்சல் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவரட்ண பண்டார, திமுத்து அபயகோன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சமன்சிறி பண்டார மற்றும் கட்சியின் பிரமுகர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். அவர் அங்கு மேலும் கூறியதாவது; இன்று நாட்டில் ஒரு அரசை மாற்றி இன்னொரு அரசை ஏற்படுத்துவதானது நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்படையச் செய்யும். எனினும் நாட்டின் அரசியல், பொருளாதார சுதந்திரம், இறைமை, ஜனநாயகம் என்பவற்றைப் பாதுகாக்கக்கூடிய சிறந்ததொரு வேலைத்திட்டத்தை உருவாக்குவது அவசியமாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களைப் பயமுறுத்தி அரசாங்கம் வெற்றி பெற்றதை மறுக்க முடியாது. எனினும், கிழக்கில் ஜனநாயகம், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. இதனை உரிய வகையில் செயற்படுத்த வேண்டியது அவசியமாகும். 1550 களில் ஏகாதிபத்தியவாதிகள் நமது நாட்டை நேரடியாக அடிமைப்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்று அவர்கள் தந்திரமாகவும், சூட்சுமமாகவும் நம்மை அடிமைப்படுத்தி வருகின்றனர். நமது உள்நாட்டு பிரச்சினைகளில் நேரடியாக தலையிடும் வரையில் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
Wednesday, 2 July 2008
அரசாங்கம் 51 ஆயிரம் கோடி ரூபா வட்டியை உலக நாடுகளுக்கு வழங்குவது துரதிர்ஷ்டமான செயற்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment