பொருட்களின் விலைகளை குறைக்காவிடின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைக்கவும் கடன் பெறுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
அரசாங்கம் இலங்கை வங்கியிடமும் 5700 கோடு ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது என்று ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விசேட வர்த்தக பண்ட அறவீட்டுச் சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, பொருட்களின் விலைகளை குறைக்க முடியாவிடின் ஆட்சியை எமமிடம் ஒப்படையுங்கள். மக்களை வருத்த வேண்டாம். அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்தும் உள்நாடுகளிலிருந்தும் கடன்களை பெற்றுள்ளது.
அதேபோல 5700 கோடி ரூபாவை இலங்கை வங்கியிடமிருந்தும் கடன்களை பெற்றுள்ளது. பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரினால் அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இதன் மூலமாக பொருட்களின் விலைகளை குறைக்க முடிமா? இவை மூலமாக நாட்டையாவது அபிவிருத்தி செய்யமுடியுமா? சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரினால் அரசாங்கம் 288 கோடி ரூபாவை செலவழித்து சார்க் மாநாட்டை நடத்துகின்றது.
கட்டிடங்கள், வீடுகளை மட்டுமல்லாது பௌத்த விஹாரைகளையும் அரசாங்கம் இடிக்கின்றது. வெலிக்கடை சந்தியில் இந்த பௌத்த விஹாரை எங்கே? ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றீர்கள்.
Thursday, 24 July 2008
இலங்கை வங்கியிடமும் அரசாங்கம் 5700 கோடி ரூபா கடன் பெற்றுள்ளது - சபையில் ரவி கருணாநாயக்க எம்.பி. தகவல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment