Thursday, 24 July 2008

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார திட்டம் கைச்சாத்து

இந்தியாவில் இருந்த கடல்மார்க்கமாக இலங்கைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை இன்று (24) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மதுரையில் இருந்து தலைமன்னார் வரை மின்சார கம்பி இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த திட்டமானது இலங்கையின் இறையாண்மையில் தலையிட வைக்கும் மற்றுமொரு முயற்சி என ஜே.வீ.பீ சார்பு இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு இலங்கையின் மின்சக்தி வழங்கலை நெறிப்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது எனவும் இதனை கொண்டு இந்தியா இலங்கையின் மீது அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன எனவும அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

No comments: