வரிச்சுமை, விலைச்சுமை என மக்கள் நொந்து போயுள்ள நிலையில் 288 கோடி ரூபாவினை சார்க் மாநாட்டுக்காக அரசாங்கம் வீணடிப்பது மக்கள் விரோத செயற்பாடாகும்.
சார்க் மாநாட்டுக்காக 288 கோடி ரூபாவினையும் மாகாண சபை தேர்தல்களுக்காக 40 கோடி ரூபாவினையும் செலவிடும் அரசாங்கம் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க பின்னிற்பது நாட்டு மக்களை ஏமாற்றும் அப்பட்டமான செயற்பாடாகும் என்று ஐ.தே.க. வின் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
உழைக்கும் வர்க்கத்தின் சம்பளக் கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் ஐ.தே.க. எப்போதும் இணைந்து கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜே.வி.பி. யின் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தயாராகி வருகின்ற 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் பேச்சு நடத்தப் போவதாக மத்திய நிலையத்தின் தலைவரும் ஜே.வி.பி. எம்.பி. யுமான கே.டி. லால்காந்த தெரிவித்திருந்தார்.
Wednesday, 23 July 2008
5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு அரசாங்கம் பின்னிற்பது மக்களை ஏமாற்றும் செயற்பாடு - திஸ்ஸ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment