வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான முறியடிப்புத் தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றனர்.
இம் முறியடிப்புத் தாக்குதலில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 படையினர் காயமடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:
ஆர்பிஜி - 01
ஆர்பிஜி எறிகணைகள் - 04
பைகள் - 04
நடுத்தர ரவை - 5,000
ரவைக்கூடுதாங்கி - 02
மழைக்கவசங்கள்
உள்ளிட்ட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment