Friday, 18 July 2008

துனைப்படைக்குழுக்கள் சந்தித்து பேசுவதில் தடை- ஏறாவூர் புதைகுழியின் எதிரொலி

ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார்


இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் மேலும் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரான சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஈ.பி.டி.பி.யின் பாவனையில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஈ.பி.டி.பியினரை தமது பிரதேசங்களிலிருந்து வெளியேற்றவேண்டுமென பொலிஸாருக்கும் கிழக்குமாகாண சபையின் நிர்வாகத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்லடி - கொம்மாதுறை இராணுவ முகாமுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஈ.பி.டி.பியினரின் அலுவலகத்திற்கு பொறுப்பாகவுள்ள ரவி என்பவர் மிக மோசமான மக்கள் விரோத செயற்பாடுகளில் கப்பம் போன்றவற்றை அறவிடுவதோடு, தொடர்ச்சியான கொலைச்சம்பவங்களிலும் ஈ.பி.டி.பிஇயக்க அலுவலக வாசல்களில் நிற்கின்ற இந்த குண்டர்கள் மக்களிடம் தினமுரசு கட்டாயமாக விற்க முயல்கின்றனர்.

வாங்க மறுப்பவர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு ரவியினுடைய அலுவலகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வயோதிபர்கள், பெண்கள் கூடதினமுரசு வாங்க மறுக்கின்ற ஒரே காரணத்திற்காக ரவி குழுவினரால் அடி, உதைக்கு உட்படுத்தப்படுவது குறித்து மேற்படி பிரதேச மக்கள் கடும் விசனம் கொண்டுள்ளனர்.


செங்கலடி பட்டினத்தை அண்டிய சித்தாண்டி, வந்தாறுமூலை போன்ற கிராமங்களில் ஊடீணு என்ற மோட்டார் சைக்கிள்கள் யாரிடமாவது இருக்கின்ற பட்சத்தில் அது ரவி குழுவினரால் பறிக்கப்பட்டு தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


ரமேஸ்பாம் என்கின்ற கடை முதலாளியின் ( ஊ.டீ.ணு) என்கின்ற மோட்டார் சைக்கிள் கூட அண்மையில் ரவியால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.


கொடுவாமடு என்கின்ற படுவான்கரை கிராமத்தில் இருந்து செங்கலடியில் கடை நடத்திவருகின்ற சுரேஸ் என்கின்ற உரிமையாளர் தனது சைக்கிள் பறிபோனதன் காரணமாக மேற்படி கடை பல வாரங்களாக பூட்டிக்கிடப்பதை அவதானிக்க முடியும்.


இப்பிரதேசத்தில் ஈ.பி.டி.பியின் பொறுப்பாளராக இருக்கின்ற ரவி என்பவர் ஆரம்பகாலங்களில் புளொட் விலும் இணைந்து செயற்பட்டவர்.


இராணுவத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கடத்தல்கள் காணமல் போதல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியிலும் அதன் பின்னர் ஈ.பி.டி.பியில் தஞ்சமடைந்த இந்த ஓடுகாலியின் அட்டகாசங்கள் இப்போது பகிரங்கமாக தொடங்கியுள்ளன.

http://nitharsanam.com/?art=25299

No comments: