Saturday, 19 July 2008

சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சினால் மாந்தைக் கிழக்கிலிருந்து 7000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு!!!

மாந்தைக் கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் 17 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் துணுக்காய் பிரதேசத்தில் கோட்டைகட்டியகுளம் தவிர்ந்த 19 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்தவர்களுமாக சுமார் 7000 வரையிலான குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன.

இதைவிட மாந்தைக்கிழக்கு மடு வவுனியா வடக்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து படையினரின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து துணுக்காய் பகுதிகளில் தங்கியிருந்த 600 வரையிலான குடும்பங்களும் அங்கிருந்து மீண்டும் இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்த குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஸ்கந்தபுரம் அக்கராயன் வன்னேரி கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றன.

மாந்தைக்கிழக்கு துணுக்காய் பிரதேசங்களிலுள்ள 18 பாடசாலைகள் தற்போது செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







No comments: