Saturday, 5 July 2008

தேசிய வருமானம் 75 ஆயிரம் கோடி – செலுத்த வேண்டிய கடன் 58 ஆயிரம் கோடி--மகிந்த சிந்தனையின் சீத்துவம்

high-expence.jpgவெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு இந்த வருட இறுதிக்கு முன்னமே அரசாங்கம் 58 ஆயிரம் கோடி ரூபாவை செலுத்த வேண்டி ஏற்பட்டதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வரவுச் செலவுத்திட்டத்திற்கு அமைய நாட்டின் முழு தேசிய வருமானம் 75 ஆயிரம் கோடி ரூபாவாகும். இந்த வருமானத்தில் 58 ஆயிரம் கோடி ரூபா பெற்ற கடன்களுக்கா மீளச்செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் அனைத்து செலவினங்களுக்கா தற்போது 17 ஆயிரம் கோடி ரூபாவே மீதமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முழு வெளிநாட்டு கடனில் 5 ஒரு வீதம் இந்த ஆண்டு திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆகியவற்றில் இருந்து கடந்த வருடங்களில் இலங்கை அரசாங்கம் கடனுதவிகளை பெற்றிருந்தது.

கடன்களை மீளச் செலுத்த 58 ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய செலவினங்களுக்கான நிதிதட்டுபாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் செலுத்த வேண்டிய தொகையை போன்ற பெருந்தொகையான பணத்தை மீண்டும் கடனாக பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பெற்றக் கடன்களை திரும்ப செலுத்துவது அரசாங்கத்தின் கட்டாய செலவு எனவும் இதனால் உரிய நேரத்தில் கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிதி நிறுவனனங்களிடம் இருந்து பெற்ற கடனகளை நாட்டின் அன்றாட செலவுக்கு பயன்படுத்த வில்லை.

அவை மூலம் நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

No comments: