ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும், அவர்களது உரிமைகளை பாதுகாக்குமாறும் கோரி உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தேசிய ரீதியான தொலைவரைய (டெலிகிராம்) பிரசாரம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் இந்த அபாயகரமான சூழலிருந்து அவர்களைப் பாதுகாக்குமாறு கோரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைவரையங்களை அனுப்பிவைக்குமாறு, நாடளாவிய ரீதியிலுள்ள சிவில் சமூக நிறுவனங்கள், அரசியல் குழுக்கள் அனைத்திற்கும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊடகவியலாளர்களும், ஏனைய குழுக்களும் தொலைவரையங்களை அனுப்பிவைக்கும் விசேட நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு மத்திய தபால் பரிமாற்றல் நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment