எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டால் ஜூலை 10ம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ரத்து செய்யப்படும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
40 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை லால்காந்த முன்வைத்துள்ளார். தற்போது 109 ஆகக் காணப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்பட வேண்டும் என்பதே பிரதான நிபந்தனையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஆலோசகர் என்ற பெயரில் 60,000 முதல் ஒரு லட்சம் ரூபா வரையில் சம்பளம் வழங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலானோர் தற்போது உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 17ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் எதிர்வரும் 10ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்படும் என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment