Tuesday, 8 July 2008

பிள்ளையான் - விமல் வீரவன்ச சந்திப்பு!

பாராளுமன்றத்தில் பிள்ளையான் பிரதிநிதித்துவம் இல்லை. கிழக்கு மாகாணசபையில் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதித்துவம் இல்லை.

இருப்பினும் இரண்டு கட்சிகளும் இரு அவைகளிலும் சிநேகபுர்வமான நடவடிக்கைகளை தொடர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்: பிள்ளையான் அமைப்பின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட குழுவினரும் தேசிய பொதுச் செயலாளர் நந்தன குணதிலக்க தலைவர் விமல் வீரவன்ச ஆகியோரை அண்மையில் சந்தித்து உரையாடிய போதே இவ்விணக்கப்பாடு ஏற்பட்டது.

இச்சந்திப்பின்போது சமகால அரசியல் விடயங்களையும் இரு கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: இதன்போது பிள்ளையான் அமைப்பின் சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதேநேரம் கிழக்கு மாகாணசபையில் தேசிய சுதந்திர முன்னணி பிரதிநிதித்துவத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்விரு விடயங்களும் பேச்சின்போது விரிவாக ஆராயப்பட்டன.

No comments: