Tuesday, 8 July 2008

குஞ்சுப் பரந்தனில் வான்வழித் தாக்குதல்கள்: பொதுமகன் ஒருவர் காயம்

சிறீலங்கா வான்படையினர் குஞ்சுப் பரந்தன் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிக்-27 மிகையொலி யுத்த வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

வான்வழித் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட போதும் குண்டுகள் வயல் நிலப் பரப்பினுள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது பொதுமகன் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் 24 அகவையுடைய செல்லதுரை கமலநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளளார்.

No comments: