Tuesday, 8 July 2008

இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் குழுவினரே ஊடகவியலாளர்களை கடத்துகின்றனர் – ஜோசப் மைக்கல் பெரேரா


இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் குழுவினரே ஊடகவியலாளர்களை கடத்திச் செல்வதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் கும்பல் ஒன்றே ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவதாக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதென்றால் கடத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை விடுப்போருக்கு எதிராக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் பதவிகளை வகிப்பதில் அர்த்தமில்லை என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments: