கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் மாநாடு நடைபெறும் சமயத்தில்
அங்கு வரும் அனைவரது கவனமும் திரும்பும் விதத்தில் பாரிய தாக்குதல் ஒன்றை தொடுக்க விடுதலைப்புலிகள் தயாராவதாக புலனாய்வு துறைக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இறுதி யுத்தம் ஒன்றுக்கான முன்னெடுப்புகளில் இறங்குவதற்காக விடுதலைப்புலிகள் 60 வயது வரையுள்ளவர்கள் வரை உள்ளவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து வெளியிடப்படும் இழப்புகள் குறித்த விபரங்கள் உண்மையானவையல்ல என்றும் ஒன்று மேம்படுத்தப்பட்டோ அல்லது மறைக்கப்பட்டோ வெளியிடப்படுவதாக பெயர் சொல்ல விரும்பாத ஓர் அதிகாரி தெரிவித்தார்.

1 comment:
win,win,win
Tamileelam!
Post a Comment