முன்னாள் அமைச்சரான எஸ்.பி.திசாநாயக்கவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ஐக்கிய தேசிய கட்சி தயாரகி வருகிறது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.
வெற்றிடமாக உள்ள இரண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றில் சிறிது காலத்திற்கு எஸ்.பி.திசாநாயக்கவை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான இணக்கத்தை வழங்குமாறும் திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீமிடம் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த பசீர் சேகுதாவுத் மற்றும் ஹசன்அலி ஆகியோர் தேசியப்பட்டியல் மூலமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு வந்தனர்.
இந்த தேசியப்பட்டியல் ஐக்கிய தேசிய கட்சியினது என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கமுக்கு இது தொடர்பா கடிதம் அனுப்பியதாகவும் இதுவரை அந்த கடிதம் குறித்து அவர் பதிலளிக்கவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார் ஹக்கீம் அவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக ரணில் விக்கரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்று வருவதாகவும்
இந்த பேச்சுவார்த்தையில் எஸ்.பி.திசாநாயக்கவையும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டால் எஸ்.பி.திசாநாயக்கவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரினால், அடுத்த வாரம் சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment