Wednesday, 16 July 2008

தாதிமார் வெற்றிடங்களுக்கு தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிகள் புறக்கணிப்பு

* நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாதார அமைச்சருக்கு கடிதம்

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் ஊடாக கோரப்பட்டுள்ள தாதிமார் வெற்றிடங்களுக்கு தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை பற்றி அமைச்சர் சந்திரசேகரன் சுகாதார அமைச்சரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 2 ஆம் திகதி இதற்கான விளம்பரம் "டெய்லி நியூஸ்' ஆங்கில பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

இதற்கான கல்வி தகைமைகளாக விண்ணப்பதாரிகள் க.பொ.த. சாதாரண பரீட்சையில் ஆங்கிலம், சிங்களம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்மொழி மூலம் சித்தியடைந்தவர்கள் இந்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாதிருப்பது பற்றி அமைச்சர் சந்திரசேகரன் சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதுவொரு மாற்றாந்தாய் நடவடிக்கையாக அமைந்து விடக்கூடாது என்றும் எனவே சுகாதார அமைச்சர் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிகளும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் சந்திரசேகரன் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: