Sunday, 6 July 2008

துபாய்: நடு விரலைக் காட்டினால் நாடு கடத்தல்!

துபாயில், பொது இடத்தில் யாரையாவது பார்த்து முதத்தை நோக்கி நடுவிரலைக் காட்டினால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று குடியேற்றத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் குடியேற்றத் துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், பொது இடத்தில் யாரையாவது பார்த்து, முகத்தை நோக்கி நடு விரலைக் காட்டினால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.

முகத்ைத நோக்கி, பொது இடத்தில் நடு விரலைக் காட்டுவது குற்றச் செயலாகும். எனவே துபாயில் வேலை பார்க்கும் வெளிநாட்டினர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல பொது இடத்தில் கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்டவையும் குற்றச் செயல்களாகும்.

இந்த குற்றச் செயலில் ஈடுபடும் எமிரேட்ஸ் குடிமக்களுக்கு தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும் என்று துபாய் குடியேற்றத்துறை எச்சரித்துள்ளது.

No comments: