Tuesday, 15 July 2008

சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும் கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரல்

கம்போடியாவின் எல்லைப்புறத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிக்குள், தாய்லாந்து படைகள் ஊடுருவி முகாம் அமைத்துள்ளன.

கடந்த 11ஆம் நூற்றாண்டில், கம்போடியாவின் எல்லையில் முதலாவது ரவிவர்மன் என்ற மன்னனால் அமைக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும், கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரி வரும் நிலையில், ஆலயத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிமித்தம், அதனை அண்டியுள்ள மலையடிவாரப் பகுதிக்குள், நாற்பது வரையான தாய்லாந்து படை வீரர்கள் ஊடுருவி நிலைகொண்டுள்ளனர்.

தமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் நிமித்தமே, அங்கு ஆயுதப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, தாய்லாந்து தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் கனோ நெட்டகவசீனா கூறியுள்ளார்.

”பிரசாத் பிரியவீகிர்” எனப்படும் குறிப்பிட்ட ஆலயத்தை, உலகப் பாரம்பரிய மையமாக ஐக்கிய நாடுகள் கல்வி - விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பு அறிவித்துள்ள பொழுதும், கம்போடியாவிற்கே அது உரித்தானது என்று, கடந்த 1962ஆம் ஆண்டில், அனைத்துலக
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

கடந்த பதினோராம் நூற்றாண்டில், முதலாம் இராஜேந்திர சோழனின் ஆதிக்கத்தின் கீழ் தென்னாசியாவும் தென்கிழக்காசியாவும் இருந்த பொழுது, தாய்லாந்து - கம்போடியா ஆகிய நாடுகளின் மன்னர்களால், சோழப் பேரரசுக்கு திறை வழங்கப்பட்டதோடு, அங்கு சைவ ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: