Tuesday, 15 July 2008

இராக்கில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்

தாக்குதலில் பலியான தனது சகாவுக்காக அழுகின்ற இராக்கிய சிப்பாய் ஒருவர்
தாக்குதலில் பலியான தனது சகாவுக்காக அழுகின்ற இராக்கிய சிப்பாய் ஒருவர்
இராக்கில் இராணுவ ஆளெடுக்கும் மையம் ஒன்றில் இரட்டை தற்கொலைக்குண்டுத் தாக்குதலொன்று நடந்திருக்கிறது.

குறைந்தது, 35 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

வெடிபொருட்கள் அடங்கிய அங்கிகளை அணிந்த இரண்டு பேர், பக்கூபா நகரில் இருக்கும் இராணுவ தளத்தில் இராணுவத்தில் சேர வந்த கூட்டதில் கலந்து, வெடிக்கச்செய்ததில், பெரும் இரத்தக்களறி ஏற்பட்டது என்று இராக்கிய பொலிஸார் கூறினர்.

குண்டுதாரிகளில் குறைந்தது ஒருவர் இராக்கிய இராணுவ வீரர் போல் உடையணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.

வடக்கு பகுதி நகரான மொசுல் நகரில், நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

No comments: