Tuesday, 15 July 2008

கருணா குழுவினரை இராணுவத்துடன் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது - கருணா

ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்;

இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஒட்டுக்குழுவான கருணா குழுவினரின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் ஒட்டுக்குழுவினரின் தலைமை முகாமில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுவர்களை படைகளில்சேர்ப்பதாக ஐ.நா.உட்பட சர்வதேச அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை தாம் விசாரணை செய்ததாகவும் ஆனால் அதில் எந்த உண்மைத்தன்மையும் இல்லையென தான் அறிவித்ததாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு முறைப்பாட்டை மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பெயர் விபரங்;கள் அடங்கிய ஒரு ஆவனத்தை தம்மிடம் கையளித்ததாகவும்

இது தொடர்பில் தாம் அனைத்து முகாம்களில் விசாரித்தபோது அவ்வாறான எந்த சிறுவர்களும் தமது படையில் இல்லையென்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் சிறுவர்களை படையில் இணைக்கவேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ள கருணா,தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்

இதன்முதல் கட்டமாக திருகோணமலையில் 200 பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

.இராணுவத்தில் மட்டுமன்றி பொலிஸ் சேவையிலும் தமது உறுப்பினர்களை இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வன்னியில் இலங்கை இராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் படுதோல்வி அடைந்துவரும் நிலையில்

இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிக்கு கருணாகுழுவிடம் இருந்து 200 உறுப்பினர்கள் இந்த படையணிக்கு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: