Wednesday, 16 July 2008

ஐ.தே.க விலிருந்து விலகினால் மாத்திரமே ஹசானுக்கு பதவி – காமினி லொக்குகே

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகினால் மாத்திரமே முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் ஹசான் திலக்க ரட்னவிற்கு கிரிக்கட் அணி முகாமையாளர் பதவி வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

குறித்த பதவி நியமனம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்குவதற்கான காலம் தாதம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹசான் திலக்கரட்ன அரசியல் அல்லது கிரிக்கட் விளையாட்டு இவற்றில் ஒன்றை மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவி நியமனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி இன்றியமையாததொன்றல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

முகாமையாளர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஹசான் திலக்கரட்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments: