Wednesday, 16 July 2008

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008 மே மாதம் வரையான 3 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை 12,000 இனால் அதிகரித்து 1.62 மில்லியனை எட்டியுள்ளதாக தேசிய புள்ளிவிபர நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 840,100 பேர் முழுமையாக வேலையற்றிருப்பதுடன், ஜூன் மாதத்தில் மாத்திரம் இத்தொகை 15, 500 இனால் அதிகரித்துள்ளதாகவும் தேசிய புள்ளிவிபர நிலையம் தெரிவித்துள்ளது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 71,000 ஆகவிருந்த வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது பாரிய பாய்ச்சலாகும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி, எரிபொருட்களின் விலையதிகரிப்பால் தொழிலாளர்கள் பலர் வேலையில்லாப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவது, சொத்துக்களின் விலைகளில் வீழ்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக் குறைவு ஆகியன வேலையில்லாப் பிரச்சினைக்குரிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

15 வருடங்களுக்கும் மேலாக வேலைக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அடுத்த ஆண்டில் பிரித்தானிய பொருளாதாரத்தில் வீழ்ச்சியேற்படும் அறிகுறி காணப்படுவதாகவும் ஆய்வாளர் பிலிப் ஷோ தெரிவித்துள்ளார்.

No comments: