புதன்கிழமை, 16 யூலை 2008
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலமோட்டைப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச்சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.
முன்நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத்தாக்குதலை நேற்று இரவு 7:00 மணிவரை நடத்தினர்.
இத்தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.
முறியடிப்புத் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

No comments:
Post a Comment