Friday, 18 July 2008

யாழ் குடாநாட்டில் விநியோகிக்கப்படும் பெற்றோலில் கலப்புத்தன்மையுள்ளதாக வாகன உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

யாழ் மாவட்டத்தில் வாகனங்களுக்காக விநியோகம் செய்யபடும் பெற்றோலில் கலப்புத்தன்மை காணப்படுவதாக வாகனங்களின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் .

கடந்த மாதம் பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மண்ணென்னை டீசல் போன்ற பொருட்களை பெற்றோலுடன் கலந்து விற்பதினால் வாகனங்கள் பழுதடைதிடும் இடையில் நிற்பது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு இருந்ததாக தெரிவிக்கின்றார்கள் .

யாழ் மவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு புறம்பாக சட்டவிரோதமாக அனுமதி பத்திரங்கள் இன்றி கடைக்கு கடை எரிபொருட்களை விற்பனை செய்யும் சொல்லப்படுகின்றது .

இவர்களிடம் கொள்வனவு செய்யும் பெற்றோல் மிகவும் தரமற்றதாக காணப்படுவதுடன் இது சம்பந்தமாக வாகன உரிமையாளர்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்களுடன் கேட்டால் தாம் அங்கீகாரக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து தொழில்கள் இன்மையால் பெற்று விற்பனை செய்வதாக கூறுகின்றார்கள் .

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையகளில் வழங்கப்படும் பெற்றோல் கலப்புத் தன்மை காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் கூறிகின்றதுடன் தாம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் எரிபொருளையே விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கின்றார்கள்

No comments: