Friday, 18 July 2008

ராஜபக்சேயின் முன்னாள் பக்தர் சங்கரியாருக்குப் பதிலாக விக்னேஸ்வரன் - கோஸ்டியாக ஜனாதிபதிக்கு ஆதரவு திரட்ட சென்னையில் பிரச்சாரம்!

கடந்த வாரம் கொழும்பிலிருந்து ஒரு கோஸ்டி சென்னைக்கு வந்தது. அந்தக் கோஸ்டியில் பழைய கெடுப்பாளர் டொக்டர். விக்கினேஸ்வரன், நிஜாம் காரியப்பர், மைக் பெரேரா, வீ.எம்.எஸ். விக்னேஸ்வரன் (விக்கி) ஆகியோர் முக்கியமான நபர்களாக சவேரா உயர்தர ஓட்டலில் அலைந்து கொண்டிருந்தனர்.

செய்தி கேள்விப்பட்டதும் ஓட்டலுக்கு விரைந்து வினவியதில், ராஜபக்சேயின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றிதான் கிழக்கு மாகாண சபை என்றும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அது கிடைத்தது என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் அந்தச் சபைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று பார்ப்பவர்களிடத்து புலம்பிக்கொண்டிருந்ததாகவும் அறியமுடிந்தது.

விக்னேஸ்வரன் முன்பு வரதராஜப் பெருமாளின் ஆலோசகராகவும், பின்னர் டக்கிளஸ் தேவானந்தேக்கு அறிவுரையாளராகவும், இப்போது ராஜபக்சேவுக்குப் புதிய வழிகாட்டியாகவும் செயற்பட்டு வருகிறார்.

அதிகாரம் இருக்கும் இடங்களாகப் பார்த்து ஒட்டிக் கொள்வது இவரது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழினத்துக்கு கேடு விளைவிப்பதற்கு நன்கு ஆலோசனை வழங்கக் கூடியவர் விக்னேஸ்வரன்.

13வது திருத்தச் சட்டத்துடன் தமிழ் மக்களது உரிமைகள் வழங்கப்பட்டுவிடும். அதற்கு மேல் தமிழ் மக்களுக்கு தேவை எதுவும் இருக்காது என்று விக்னேஸ்வரன் பலரிடத்திலும் எடுத்துரைத்து வருவதாக கேள்விப்பட்டோம்.

13வது சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னர் டக்கிளஸ் தேவானந்தேயும் பலமா கதைத்துவந்தார். விக்னேஸ்வரனின் வழிகாட்டுதலினால்தான் டக்கிளசும் அப்போது இதனை வலியுறுத்தி தனது அரசியலை நகர்த்திவந்தார்.

சங்கரியார் விழுந்து விழுந்து இரவிரவாக ராஜபக்சேயைப் புகழ்ந்தும் புலிகளைப் பழித்து எழுதி ஒரு லாபத்தையும் அடைய முடியாமல் போய்விட்டது. பாரிசில் கிடைத்த ஒரு லட்சம் டொலரைத் தவிர எந்தப் பயனும் ராஜபக்சேயிடமிருந்து கிடைக்காததால் அவர் களையிழந்து ஐரோப்பா சென்று ஓய்வெடுத்துக்கொண்டு, திரும்பி என்ன செய்வது என்ற பலத்த ஆலோசனையில் மூழ்கியுள்ளார்.

அடுத்து இந்தியா சென்று தமிழர் உரிமைப் பற்றி ஏதாவது பேசி வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

கடந்த மூன்றாண்டுகளாக சங்கரியார் மிகுந்த நம்பிக்கையுடன் மேசை மீது அடித்து உதைத்து தனிநாடு கேட்போரை இழிவு படுத்தி வந்தார். ராஜபக்சேயைக் கடவுளுக்கு அடுத்த படியானவர் என்று செய்தித்hள்களில் பிரசாரம் செய்து அவரிடத்து நற்புகழைச் சேர்த்துக் கொண்டார்.

சங்கரியாரின் அறிக்கைகள் நீண்டநாட்களுக்கு சுவை படவில்லை ராஜபக்சேவுக்கு. ஒரே விடயத்தைப் பக்கம் பக்கங்களாக எழுதி பத்திரிகைக்குக் கொடுத்துவர ஒரு கட்டத்தில் ராஜபக்சேவுக்கே கோபம் வந்துவிட்டது. இனி இந்த ஆள் போண்பன்னினால் நான் பிசியாக இருப்பதாகச் சொல்லிவிடவும் என்று உத்தரவே போட்டுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சங்கரியாரின் கடிதச் சேவை நின்றுவிட்டது. சங்கரியாருக்குப் பதிலாக இப்போது விக்னேஸ்வரன் தெரிவாகியுள்ளார். இவர் நற்பெயரும், பணமும் சம்பாதிக்கும் வரை ஓயமாட்டார். அந்த வழியில்தான் இவர் சென்னை வந்து தனது பிரசார வேலையை ஆரமத்பித்துள்ளார்.

சங்கரியார் செய்த வேலையை விட பன்மடங்கு தன்னால் சேவை செய்ய முடியும் என்று ராஜபக்சேயிடம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. எனவே ராஜபக்சேயின் மாகாண அரசுக்கு ஆதரவு தேடும் வேலையில் விக்னேஸ்வரன் ஈடுபடுவதில் ஆச்சரியம் எதும் இருக்கப்போவதில்லை.

தமிழினத்தை வீழ்த்துவதில் சிங்களவரை விட குறிப்பிடும் படியான தமிழர்கள்தான் முன்னணியில் உள்ளனர். சங்கரியார் போல் இன்னும் சில சங்கரிகள் தோன்றுவர்.

பருத்திவேந்தன்.

thank you:inaiyam

No comments: