“சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது.
இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக, வடக்குகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்தி அதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் சந்திப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்திய பிரதமர் சிவநேசதுரையை சந்திப்பது இந்தியா, கிழக்கு மாகாணத்தை அங்கீகரிப்பதாக அமைந்து விடும் என்ற நிலைப்பாட்டையும் கொடுத்து விடும் என ஆய்வாளர்கள் கருதுவதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தியா கொண்டுள்ள அதிகளவான முதலீட்டு திட்டங்களை கருத்திற்கொண்டு சந்திரகாந்தனை சந்திக்கவேண்டியேற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மன்மோகன் சிங், எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ரா சம்பந்தன், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment