Saturday, 26 July 2008

நிபந்தனைகளை புலிகள் ஏற்காவிடில் ஒட்டுக் குழுக்களுடன் பேசித் தீர்வை காண்போம்--பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா

சமாதானப் பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்காவிடில் ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கம் கொண்டுவரும்.

என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தமிழீழ கோட்பாட்டையும் கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் அவர்களு டன் பேச்சு நடத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயார் என்று நேற்றுக் காலையில் தியத்தலாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

தமிழர்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் மட்டுமல்லர். வேறு பல தமிழ்க் குழுக்களும் செயற்படுகின்றன. பேச்சு நடத்துவதற்கு அரசு முன்வைக்கும் நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்தால் ஏனைய தமிழ் குழுக்களு டன் பேசி நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்துவோம்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு தமிழீழம் என்ற தமது கோட்பாட்டையும் கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் பங்கேற்க முன்வந்தால் அவர்களுடன் பேச்சு நடத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு அரசு எப்போதும் தயாராகவே இருக்கின்றது.

"சார்க்'' மாநாட்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளார்கள். அதனால் அரசும் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் பழைய வரலாறு எங்களுக்குத் தெரியும் தோல்வியை நோக்கிச் செல்லும் போதெல்லாம் போர் நிறுத்தத்தை அறிவித்து தம்மைப் பலப்படுத்துவதில் அவர்கள் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் இப்போது போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிக ளின் வலையில் சூழ்ச்சியில் சிக்குவதற்கு நாங்கள் தயாரில்லை.

விடுதலைப்புலிகள் மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர். வேறு தமிழ்க் குழுக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பணிபுரிகிறார்கள் ???.

சமாதானப் பேச்சுக்கான அரசின் நிபந்தனைகளை விடுதலைப்புலிகள் ஏற்காது விட்டால் ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் பேச்சு நடத்தி உகந்த தீர்வு ஒன்றைக் கொண்டு வந்து சமாதானத்தை உருவாக்குவோம் ???. என்று பிரதமர் கூறினார்.

No comments: