மரபுவழிப்படையாக செயற்பட முடியாதளவுக்குப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கடந்தவாரம் வெளிநாட்டு செய்தி நிறுவனங் களின் கொழும்பு முகவர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருக்கிறார்.
"இந்த வருடத் தொடக்கத்திலேயே மரபுவழி யில் போரிடுகின்ற திறனைப் பெரிதும் இழந்திருந்த புலிகள் தற்போது அந்தத் திறனை முற்றாகவே இழந்து, ஒரு மரபுவழி இராணுவம் என்ற ரீதியில் அவர்கள் தோற் கடிக்கப்பட்டு விட்டதாக' அவர் தெரிவித்திருக்கிறார்.
"படையினரின் நடவடிக்கைகளை எதிர் கொள்கின்ற விதத்தில் இருந்து இதை உணரமுடிகிறது. முன்னர் புலிகளின் தற்காப்பு நிலை களைக் கடந்து ஒன்று அல்லது இரண்டு கி.மீ தூரம் முன்னேறுவதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் எடுக்கும். ஆனால், இப்போது அவர்கள் சண்டை தொடங்கியதுமே பின் வாங்குகின்றனர்.
இதிலிருந்து அவர்களின் மரபுவழிப் போர்பலம் அழிவுற்றுள்ளதை உணர முடிவதாகவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தி ருக்கிறார். அத்துடன் புலிகள் தற்போது ஆட் லறிகள், கனரக மோட்டார்களை அதிகம் பயன் படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை அறிந்ததும் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த சந்திப்பின்போது, இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இலங்கையில் செயற் பட்ட கேணல் ஹரிகரன் தெரிவித்த கருத்து ஒன்றே நினைவுக்கு வந்தது.
"சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி அழிந்து விட்டது. புலிகளின் மரபுவழியில் போரிடும் ஆற்றல் தற்போது குறைந்துவிட் டது. அவர்களால் சிறிய கொமாண்டோத் தாக் குதல்களை மட்டும் நடத்த முடியுமே தவிர மரபுவழிப் போர்களை நடத்த முடியாது' என அவர் தெரிவித்திருந்தார். அவரது அப் போதைய கருத்தும் இராணுவத் தளபதியின் இப்போதைய கருத்தும் வெவ்வேறுபட்ட காலப்பகுதிகளில் ஒத்துப் போவதைக் காணமுடிகிறது.
இந்தநிலையில், தற்போது பலரிடமும் இரு கேள்விகள் உள்ளன. புலிகள் மரபுவழியில் போரிடும் ஆற்றலை இழந்து விட்டனரா? அவர்கள் வலிந்த தாக்குதல்களை நடத்தமுடி யாதளவுக்குத் தற்காப்பு நிலைக்குள் தள்ளப் பட்டு விட்டனரா? என்பனவே அவை.
புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, படையணிகளின் உருவாக்கம், அவர்களின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து சற்று உன்னிப்பாக அவதானிக்கின்ற எவருமே புலி கள் இயக்கத்தின் மரபுவழிப் போர்ப் பலம் குறித்த தற்போதைய சர்ச்சைகளில் குழப்பத் தைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சகல படை வளங்களையும் கொண்டிருக் கும், வெளிநாட்டு இராணுவ உதவிகளில் தங்கியுள்ள ஒரு நாட்டின் தேசிய இராணுவத் துக்கு எதிராகப் போரிடுகின்ற எந்தவொரு போராளிக் குழுவுமே முழுமையான மரபு வழிப்படையாகச் செயற்பட்டு விடமுடி யாது. முற்றிலும் மரபுவழி இராணுவமா கச் செயற்பட வேண்டுமாயின் அதற்குத் தேவைப்படும் வளங்களை ஒதுக்க ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் அரசாங்கத் தால் மட்டுமே முடியும்.
புலிகள் இயக்கம் ஒரு போராளி இயக் கமே தவிர ஒரு அங்கீகரிக்கப்பட்ட அர சின் இராணு வம் அல்ல. அங்கீகரிக்கப் பட்ட அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டபூர்வமாக ஆயுதங்களை இறக்குமதி செய்கின்ற வசதிகள் இருக்கும். புலிக ளுக்கு அப்படியில்லை. அங்கீகரிக்கப் பட்ட அரசின் இராணுவத்துக்கு தேவை யானளவு படையினரைச் சேர்க்க அதன் பொருளாதார பலம் இடமளிக்கும்.
ஆனால் புலிகள் இயக்கத்துக்கு அப்படி செய்யமுடியாது. இப்படியாகப் பல காரணிகளை அடுக்கிக் கொண்டே போக லாம்.
புலிகள் இயக்கம் மரபுவழிப் படையணி களை வைத்திருந்தது வைத்திருப்பது உண்மை. ஆனால் அதற்காகப் புலிகளை ஒரு முழுமையான மரபுவழி இராணுவ மாகக் கரு திக் கணக்குப் போடுவது தவ றான எடுகோள். மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி, ஆயுத வளங் களைக் கொண்ட எந்தவொரு படையமைப் புமே, மரபு வழிப் போர்களை மட்டுமே செய் யத் தீர்மானித்தால் அதுவே அவர்களின் அழிவுக்குக் காரணமாகி விடும்.
புலிகள் இயக்கத்தின் வரலாற்றையும் தாக் குதல் தந்திரோபாயங்களையும் விரிவாக ஆய்வு செய்யும் போது, அவர்கள் எப்போது மரபுவழிப் படையாகச் செயற்பட்டிருக்கின்ற னர், எப்போது கெரில்லாப் படையாகச் செயற் பட்டிருக்கின்றனர், எப்போது கலப்பு நிலைத் தந்திரங்களைக் கையாண்டிருக்கின்றனர் என் பது தெளிவாகப் புரியும்.
புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு முதலாவது மரபுவழிப் படையணியான "சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி'யைத் தோற்று வித்தது. அதன்பின்னரும் கூட புலிகள் முற்றி லுமாக மரபுவழிப்படையாகச் செயற்பட்ட தில்லை. தற்போது ஜெயந்தன் படையணி, இம் ரான்பாண்டியன் படையணி, சோதியா படை யணி, மாலதி படையணி என்று பல மரபு வழிப் படையணிகளைக் கொண்டிருப்பினும் கூட அவற்றை முழுமையான மரபு வழிப் போருக்குப் பயன்படுத்துவதில்லை.
சமர்களின்போது, அந்த இடத்தின் முக்கியத் துவம், புவியியல் அமைப்பு, படைபலம், எதிர் காலநோக்கு எனப் பல விடயங்களைக் கருத் தில் கொண்டே மரபுவழிச்சமரைச் செய்வதா, கெரில்லாப் பாணியில் செயற்படுவதா, கலப்பு உத்தியைக் கையாள்வதா என்று புலிகள் தீர் மானித்துவந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் "ரிவிரெச'வின் போது மரபுவழி யில் செயற்பட்ட புலிகள், கிளிநொச் சியில் "சத்ஜய'வின்போது முழுமையாக மரபு வழிப்போரை நடத்தவில்லை. அதுபோன்றே ஜயசிக்குறுவின்போது கலப்பு உத்திகளையே கையாண்டனர். ஆனால் அவ்வப்போது மரபு வழியிலான போராற்றலையும் நிரூபிக்கத் தவறவில்லை. ஆனால் "ரணகோஷ'வின் போது கலப்பு போர் உத்திக்கும் குறைந்த நிலையிலேயே கிட்டத்தட்ட கெரில்லா நிலை யிலேயே இடங்களைக் கைவிட்டுப் பின்வாங் கினர்.
கெரில்லாக்கள் சந்தர்ப்பம் வாய்க்கும் போது தாக்கிவிட்டு தப்பி ஓடிவிடும் தந்திரத்தைக் கையாள்வது போலவே "ரணகோஷ'வில் புலி கள் செயற்பட்டனர். ஆனால் அதே புலிகள் தான் ஓயாத அலைகள்3 நடவடிக்கையில் வன்னியின் தென்எல்லையிலும் வடக்கிலும் தமது மரபுவழிப் போராற்றலை நிரூபித்திருந்த னர்.
ஒரு படைநடவடிக்கையை எதிர்கொள்ளும் விதத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு படையமைப்பை முழுமையான கணிப்புக்குட் படுத்த முடியாது. "சத்ஜய'வில் தொடங்கி "ஜய சிக்குறு' , "ரணகோஷ' போன்ற படைநகர்வுக ளைப் புலிகள் எதிர்கொண்ட வித்தைக் கருத் தில் கொண்டு அவர்கள் மரபுவழியில் போ? டும் திறனை இழந்து விட்டதாக அப்போது ஒரு கணிப் பைச் செய்திருந்தால், ஓயாத அலைகள்3 இன் பின்னர் அது எப்படிப் பொய்யாகியிருக்குமோ, அதுபோலவே இன் றைய நிலையையும் கருத்தில் கொள்ள வேண் டும்.
வன்னியின் தெற்கு எல்லையில் புலிகள் படை யினரை எதிர்கொள்ளும் விதத்தைக் கணக்கில் கொண்டே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கேணல் ஹ?கரன் போன்ற சிலரும் புலிகளின் மரபு வழியில் போரிடும் பலம் பற்றிய கணிப்பீடுகளை வெளியிட்டிருக் கின்றனர்.
ஆனால், வன்னியில் நடைபெற்று வரு கின்ற போரில் புலிகள் இயக்கத்தின் மரபு வழிப்போரிடும் திறனில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வட போர்அரங்கை எடுத்துக் கொண்டால் புலிகள் தமது மரபுவழிப் படைகளின் போராற்றல் மூலம் படையினரை ஒரு கிடுக்கிப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். புலிகள் இயக் கம் மரபுவழியில் போரிடும் திறனை இழந் திருந்தால் வட போர் அரங்கின் களநிலைமை தலைகீழாகியிருக்கும்.
அரச படைகளுக்கு வன்னிப் பிரதேசத்தை யும், முல்லைத்தீவில் உள்ள புலிகளின் தலை மைத் தளங்களையும் கைப்பற்றுவதற்கும், புலி களின் ஆளணி வளத்தை அழிப்பதற்கும் மிகச் சிறந்த போர்அரங்காக இருப்பது வட போர் அரங்கே என்பதில் எந்தச் சந்தேகமும் கிடை யாது. போதியளவு படையினர், திறந்த வெளிச் சமர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இயந்திர காலாற்படை பிரிகேட், ஏனைய சிறப்புப் படை யணிகள் என்பன வட போர்அரங்கில் படை யினருக்குச் சாதக மான அம்சங்கள் அதிகம்.
பலம்மிக்க கடற்படை, விமானப்படை என் பனவற்றைக் கொண்டிருக்கும் அரசபடைகள் வடபோர் அரங்கில் இருந்து தரைவழிச் சமரைத் தொடங்கினால், யாழ். கடனீரே? வழியாக துருப்புக்களைத் தரையிறக்கு வதற்கும், வான்வழி தரையிறக்கங்களைச் செய்வதற் கும் சாதகமான புவியியல் அமைப்புகள் நிறையவே காணப்படுகின் றன அத்துடன் முகமாலை கிளாலி நாகர் கோவில் முன்னரங்க நிலைகளில் இருந்து நடவடிக்கையைத் தொடங்கினால் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, விஸ் வமடு, பூநகரி, முல்லைத்தீவு என்று கேந் திர முக்கியத்துவம் மிக்க இடங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் இந்தக் கேந்திர நிலைகளில் இருந்து விலகி, வன்னியின் தென்முனைக் காடுகளுக்குள் அரசபடைகள் களமிறக்கப்பட்டிருப்பதற் குக் காரணமே, புலிகளின் மரபுப் போர்ப் பலம்தான்.
வட போர்அரங்கின் போரியல் சாதகத் தன்மைகள் இராணுவத் தளபதி லெப்.
ஜெனரல் சரத் பொன் சேகாவுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அவர் வன்னி மீதான படையெடுப்புக்கு, வட போர் அரங்கைத் தெரிவு செய்யாமல் தென் முனைக் காடுகளைத் தெரிவு செய்தமைக் கான காரணம் புலிகளின் மரபுவழிப் போரிடும் பலம் தான் என்பது மிகைப்படுத் தப்பட்ட கருத்தல்ல.
அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் உரை யாற்றிய புலிகளின் வட போர்முனைக் கட்ட ளைத் தளபதி கேணல் தீபன்?, "வடபோர் முனையில் ஏற்படுத்தும் வெற்றிகளின் தாக்கம் தான் விடுதலைப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. வடபோர்முனை சிறி லங்கா அரசின் அரசியல் களமாக திகழ்கிறது' எனத் தெ?வித்திருந்தமை இங்கு சுட்டிக்காட் டத்தக்கது.
வட போர்முனையில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 500 புலிகள் கொல் லப்பட்டும் காயமுற்றும் களத்திலிருந்து அகற் றப்பட்டதாகப் படை த்தரப்பு கூறியது. இராணு வத் தளபதி சொல்வது போல, நிலப்பரப்பை பிடிப்பதல்ல, புலிகளைக் கொல்வதே முக்கிய நோக்கம் என்றால் கொத்துக் கொத்தாகப் புலிகளைக் கொல்லக்கூடிய வடபோர் அரங் கில் இருந்து விலகி நிற்பது எதற்காக என்பதை யும் புரிந்து கொள்ள வேண்டும்.
வன்னியின் தென்முனைப் போர்அரங்கு களில் புலிகள் நடத்துவது முறியடிப்புப் போரா கத் தெரியவில்லை. முறியடிப்புப் போர் என் பது வட போர்அரங்கில் புலிகள் செய்யும் சமர் களை ஒத்தது. படைகளை இம்மியளவும் நகர விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடிப்பதே முறியடிப்புப் போர். ஆனால் வன்னியின் தென்முனையில் முறியடிப்புப் போரை நடத்துவதற்கான புவியியல் சூழலும்இல்லை.
அதற்குப் புலிகளிடம் படைபலமும் இல்லை.
மொத்தம் 115கி.மீ நீளமான முன்னரங்க நிலைகளில் இருந்து தொடங்க வாய்ப்புள்ள எந்த மரபு வழிப் படைநகர்வையும் முறியடிப் புப் போர் என்ற அடிப்படையில் எதிர்கொள் வது சாதாரண விடயமல்ல.
மிகப் பெரிய ஆளணி வளக் கட்டமைப் பைக் கொண்டிருக்கின்ற அரசபடைகளே, மரபு வழிப் போர் உத்தியைத் தவிர்த்து, ஒரு கெரில்லா அமைப்பின் உத்திகளைக் கையாள் கின்ற நிலைக்குக் கீழ்த் தள்ளப்பட்டிருப்பதற்கு, வன்னியின் தென்முனையில் இருக் கின்ற புலி களின் படைபலம் தான் காரணம். உண்மையில் இந்தப் போர்அரங்குகளில் அரசபடைகள் கொண்டிருக்கின்ற படைபலத்தைக் கொண்டு, இந்தளவுக்கும் வட போர்அரங்குடன் இணைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் புலிகளின் வழிமறிப்புச் சமர்களின் வீரியமே போர் இழுபட்டு, நீடித்துச் செல்வதற் குக் காரணம்.
வழிமறிப்புச் சமர்கள் என்னும் போது, படையினரின் போர்த்திட்டங்களை தாமதப் படுத்தி, தமக்குச் சார்பான சூழல் உருவாகும் வரை அவர்களது இலக்கை அடையவிடாமல் தடுப்பதேயாகும். புலிகள் தமது எதிர் நடவடிக் கைக்குச் சாதகமான சூழலை எதிர்பார்த்தே இந்த வழிமறிப்புச் சமர்களை நடத்துவதுண்டு.
இந்த வழிமறிப்பு சமர்கள் சாதகமான இடங் களில் உக்கிரமாகவும் பலநாட்கள், வாரங்கள், மாதங்கள் மட்டுமன்றி வருடக்கணக்கில் கூட இழுபட்டுச் செல்லலாம். அதேவேளை சாதக மற்ற களமுனைகளில் தந்திரமாகப் பின்வாங்கு வதும் இதன் ஒரு குணாம்சம். வன்னியின் தென்முனைக் காடுகளில், இப்போது புலிக ளின் வழிமறிப்புச் சமர்கள் மாதக் கணக்கைக் கடந்து வருடக்கணக்கில் தொடர்கிறது.
"ஜயசிக்குறு' நடவடிக்கையிலும் இதே போன்ற உத்தியைப் புலிகள் பின்பற்றியதும், பின்னர் ஓயாத அலைகள்3 என்ற எதிர்தாக்கு தல் மூலம் இழந்த பிரதேசங்களை அவர்கள் கைப்பற்றியதும் வரலாறு. மரபு வழிப் போர்ப் பலம் இருக்கிறது என்பதால், படைகளைக் கொண்டு போய் சாதகமற்ற இடங்களில் சமரிட வைத்து, இருக்கின்ற பலத்தைச் சிதைத்துக் கொள்வது ஒரு சிறந்த தலைமையின் பண் பல்ல.
புலிகளின் பலத்தையும் திறனையும் மதிப் பிடுகின்றபோது, இலங்கை, இந்திய, சர்வதேஇராணுவ வல்லுனர்கள் செய்த தவறுகள் கடந்த காலத்தில் பெரியளவிலான விமர்சனங் களுக்குட்டுள்ளன. "700 சாரம் கட்டிய பையன் கள்' என்று கணித்த இந்தியா கடைசியில் 1155 படையினரை இழந்து திரும்பியது. இலங்கைப் படைகளுக்கு இத்தகைய அனுபவங்கள் சொல் லிக் கொள்வதற்கு ஒன்றிரண்டன்றி ஏராளமாக உள்ளன. ஆனையிறவைக் கைப்பற்ற முடி யாது என்று அமெரிக்கப் படையதிகாரிகள் கணித்ததும் கூடத் தவறாகிப் போனது.
அடம்பனைப் பிடிக்க கடந்த ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பித்த படைநடவடிக்கை, மே மாதம் தான் அந்த நோக்கத்தை நிறைவு செய் தது. அதற்குக் காரணமாக இருந்ததும் புலிக ளின் மரபுப்போர் பலமே. புலிகளின் மரபுப் படையணிகளின் போரிடும் பலம் என்பது அரசபடைகள் நினைத்த நேரத்தில் வெளிப்ப டுத்தப்பட்டதான வரலாறு இல்லை.
Saturday, 5 July 2008
மரபுவழிப்படையாக செயற்பட முடியாதளவுக்குப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனரா--சுபத்ரா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment