மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லடியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை மாலை இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு காவல்துறை அலுவலகத்தில் வீட்டு உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பிரசாத் (வயது 22), சுபராஜ் (வயது 20), தினேஷ் (வயது 29), மகேந்திரராசா (வயது 23), கோணேஸ் (வயது 27) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment