மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கியதேசியக் கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரான அரசரட்ணம் சசிகரனின் வீட்டில் இன்றிரவு (யூலை11) 9.15 அளவில் கைக்குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டின் மீது இனம்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் காவல் கடமையில் இருந்த 37 வயதுடைய பண்டார, மற்றும் 38 வயதுடைய திஸ்ஸ என்ற இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ரீ.எம்.வீ.பீயின் முக்கியஸ்த்தரும் மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் உறுப்பினருமான காலிங்கன் என்பவர் மீது சசிகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இன்றைய தினம் 5 தடவைகள் மோட்டார் சைக்கிளில் தனது வீடு கண்காணிக்கப்பட்டதாக சசிகரன் தெரிவித்துள்ளார்.
Friday, 11 July 2008
கிழக்கு மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment