Sunday, 6 July 2008

மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசங்களில் வர்த்தக நிலைய ஊழியர்களின் விரபம் படையினரால் திரட்டல்

மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசங்களில் உள்ள வர்த்தக நலையங்களில் கடமை புரியும் ஊழியர்களின் பூரண விபரங்கள் படையினரால் திரட்டப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே அதிரடிப்படையினரால் வர்த்தக நிலையங்களில் கடமை புரியும் உரிமையாளர் உள்ளிட்ட ஊழியர்களின் விரபங்களும் அடையாள அட்டை இலக்கங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக படைத்தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை வர்த்தக நிலையங்களின் முன்பாக துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், வாகனங்கள் நிறுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: