Monday, 21 July 2008

யாழ்ப்பாணத்தில் இருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

படையினர் மீது கைக்குண்டு வீச்சை மேற்கொண்ட போதே இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக மல்லாகம் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்று காவல்துறையினர் சாட்சியளித்தனர்.


இந்த நிலையில், அடையாள அட்டையைக் கொண்டு கீரிமலை, நகுலேஸ்வர வீதியைச் சேர்ந்த 32 வயதான பொன்னுத்துரை விஜயரட்னம் எனச் சடலத்திற்கு உரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சடலம் தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் நேற்று இரவு 7.30 அளவில், 46 வயதான வல்லி வைத்தியலிங்கம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


வீட்டிற்கு வந்த சிலர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம், மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments: