பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மெசன்ஜர் வீதியில் இன்று பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் பிரதேசத்தை காட்டுவதற்காக சென்ற வேளை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியொன்றின் மூலம் குறித்த சந்தேக நபர் பொலிஸார் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முனைந்ததாகவும், பொலிஸார் பதில் தாக்குதல் மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment