Monday, 14 July 2008

கதிர்காம ஆடிவேல் விழாவில் நாய்களின் உதவியுடன் பக்தர்கள் சோதனை

கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ கால பெரஹராவில் பார்வையாளராக இருக்கும் பக்தர்கள் நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது...

 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ கால பெரஹராவில் பார்வையாளராக இருக்கும் பக்தர்கள் நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

கங்கை மற்றும் ஆலயம் உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் நுழைவாயிலில் தீவிர பொருட்பரிசோதனை மற்றும் உடற் சோதனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு பெரஹரா பார்க்க அமர்ந்திருக்கும் வேளையில் மீண்டும் நாயுடன் வந்து சோதனை செய்வதென்பது எவ்வகையில் பொருந்தும்? என பக்தர்கள் கேட்கின்றனர்.

இந்த நாய்ச் சோதனையால் பெரஹரா நிகழ்வில் பூரண திருப்தி அடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: