கிளிநொச்சிப் பிரதேசத்தை படையினரிடமிருந்து பாதுகாப்பதற்காக வெள்ளான்குளம் கடல் பகுதியிலிருந்து துணுக்காய் வரை கால்வாய் ஒன்றை அமைக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 57ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் மேற்கொண்டு வரும் உக்கிர முன்நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாக மன்னார் பகுதி பூரணமாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய வலிந்த தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் புலிகள் இந்த விசேட கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் புலனாய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன
Tuesday, 22 July 2008
கிளிநொச்சியை பாதுகாப்பதற்கு புலிகள் கால்வாய் நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment